TamileNews
Cinema >> KOLLYWOOD
 அஜித்துக்கு வில்லனாகும்  விவேக் ஒபராய்

அஜித்துக்கு வில்லனாகும் விவேக் ஒபராய்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் புதிய படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அவர் யார் என்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில் விவேக் ஒபராய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
 
வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து அஜித் - இயக்குநர் சிவா இருவரும் மீண்டும் இணைந்துள்ள  படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் இருவரும் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இன்னும் பெயர் சூட்டப்படாத இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க  அஜித்தின் விருப்பத்தின்படி இர்பான் கான், அபிஷேக் பச்சன் போன்ற முன்னணி இந்தி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக  சொல்லப்பட்டது.
 
இந்நிலையில் அஜித்துடன் மோதும் வில்லனாக விவேக் ஒபராயை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் அடிபடுகிறது. வெகுவிரைவில் அஜித் - விவேக் ஓபராய் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள். சுனாமி  வந்து தமிழ்நாட்டில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்ட போது, ரியல் ஹீரோவாக களத்தில் இறங்கி தன்னுடைய சொந்தப் பணத்தை செலவு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தவர் விவேக் ஓபராய் என்பது குறிப்பிடத்தக்கது.