TamileNews
Events >> LOCAL
 வருடாந்த தேர்த்திருவிழா

வருடாந்த தேர்த்திருவிழா

கண்டி குண்டசாலை, பள்ளேகல ஸ்ரீ முத்துமாரியம்மன் பெரிய கோவில் வருடாந்த தேர்த்திருவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை விநாயகர் வழிபாடு, கொடியேற்றம், கரகம் பாலித்தல், பால்குட பவனி போன்ற நிகழ்வுடன் விழா ஆரம்பமாகவுள்ளது.
 
இவ்விழாவில் எதிர்வரும் சனிக்கிழமை காளி அம்பாள் கரகம் உள்வீதி வரும் அதனை தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு வேட்டை திருவிழா நடைபெற்ற பின் ரதபவணி இடம்பெறவுள்ளது.
 
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுவதோடு மாலை பொங்கல் பூஜையும் நடைபெறும்.
 
அதனைத்தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை ஸ்ரீ காளி அம்மன் பூஜையும், தீர்த்தோற்சவமும் நடைபெற்று விழா இனிதே நிறைவுபெறும்.
 
(க.கிஷாந்தன்)