TamileNews
Events >> LOCAL
உலக அஞ்சல் தின நிகழ்வு

உலக அஞ்சல் தின நிகழ்வு

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக தினத்தை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்திலுள்ள தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

 
இதற்கமைவாக மஸ்கெலியா தபால் காரியாலயம் ஏற்பாடு செய்த உலக அஞ்சல் தின நிகழ்வு மஸ்கெலியாவில் இன்று காலை இடம்பெற்றது.
 
நுவரெலியா மாவட்ட அஞ்சல் அதிகாரி வினோதினி கார்த்திகேசு தலைமையில் இடம்பெற்ற மேற்படி அஞ்சல் தின நிகழ்வில் மஸ்கெலியா நகரில் வீதி நாடகம், துண்டுப்பிரசுர விநியோகம், ஊர்வலம் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றது.
இங்கு தபால் நிலையத்தின் சேவைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
 
(க.கிஷாந்தன்)