TamileNews
Exotic >>
   இருந்தது 74நிமிடங்கள் மட்டுமே: ஆனால் செய்தது:

இருந்தது 74நிமிடங்கள் மட்டுமே: ஆனால் செய்தது:

பெண் குழந்தை  ஒன்று  பிரித்தானிய நாட்டில் பிறந்து 74 நிமிடங்களில் உயிரிழந்ததை தொடர்ந்து அக்குழந்தையின் பெற்றோர் எடுத்த உருக்கமான நடவடிக்கை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  ட்ரூ லீ(53) மற்றும் எம்மா(33) என்ற தம்பதி இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் எம்மா கர்ப்பம் அடைந்த நிலையில் வயிற்றில் இருந்த பெண் குழந்தைக்கு ஹோப் எனப் பெயர் சூட்டியுள்ளனர்.
 
ஆனால், இதற்கெல்லாம் அப்பாற்பட்டு பெற்றோரின் கனவுகளை தகர்க்கும் வகையில் வயிற்றில் உள்ள குழந்தை பலவீனமாக உள்ளதால் கருக்கலைப்பு செய்யுமாறு மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.  மருத்துவர்களின் அறிவுரையை ஏற்காத எம்மா குழந்தையை பெற்றெடுக்க முடிவு செய்துள்ளனர். குழந்தை பிறந்து உயிரிழந்தால் அதன் உறுப்புக்களை மற்றவருக்கு தானம் செய்யலாம் என முடிவு செய்துள்ளார்.
 
இதனைத்தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்னர் எம்மாவிற்கு பிரசவம் நடந்துள்ளது. மருத்துவர்கள் கூறியதுபோல் குழந்தை பிறந்தவுடன் 74 நிமிடங்களில் உயிரிழந்துள்ளது. மகளின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத நிலையிலும் குழந்தையின் உறுப்பை தானம் செய்ய அறிவிப்பு வெளியிட்டனர். இதனை தொடர்ந்து பெயர் வெளியிடப்படாத பெண் ஒருவர் குழந்தையின் சிறுநீரகத்தை தானமாக பெற்றுள்ளார்.
 
மேலும் பெற்றோரின் நடவடிக்கையை பாராட்டி ஒரு உருக்கமான கடிதத்தை அப்பெண் அனுப்பியுள்ளார். அதில, 'உங்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை நான் அறிவேன். ஆனால், உங்களால் தான் நான் மீண்டும் உயிர் பிழைத்துள்ளேன். உங்கள் இருவரையும், உங்கள் மகளையும் என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய வரலாற்றில் பிறந்து 74 நிமிடத்தில் குழந்தை உயிரிழந்து உறுப்பு தானம் செய்துள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.