TamileNews
Life Style >> ART & SCIENCE
நேபாளத்தில் யானைகள் திருவிழா

நேபாளத்தில் யானைகள் திருவிழா

நேபாளத்தின் சித்வான் நகரில் நடைபெற்றுவரும் 13 ஆவது யானைகள் திருவிழாவில் 100க்கும் அதிகமான யானைகள் கலந்துகொண்டன. விழாவின் ஒரு பகுதியாக யானைகளுக்கு கால்பந்து போட்டி நடைபெற்றது.  கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமான இத்திருவிழா இன்று நிறைவு பெற்றது.

இந்த திருவிழாவில் யானைகளுக்கான அழகுப்போட்டியும் நடைபெற்றது. வண்ணவண்ண அலங்காரத்தில் 100க்கும் மேற்பட்ட யானைகள் அணிவகுத்து சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அலங்காரம் மற்றும் தோலின் தன்மை அடிப்படையில் சிறந்த யானைகள் தெரிவு செய்யப்பட்டன.