TamileNews
News >> LOCAL NEWS
கிளாஸ்கோ ஆகுரோவா தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு

கிளாஸ்கோ ஆகுரோவா தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு

அக்கரப்பத்தனை  கிளாஸ்கோ ஆகுரோவா தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக அத்தோட்டத்தின் தொழிலாளர்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

கூட்டு ஒப்பந்த புதிய சம்பளம் அடிப்படையில் திறன் கொடுப்பனவு 140 ரூபாவை தமது சம்பள பற்றுச்சீட்டில் உள்ளடக்க மறுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

சுமார் 100ற்கும் அதிகமான தொழிலாளர்கள்,டயகம தலவாக்கலை பிரதான வீதியின் ஆகுரோவா சந்தியில் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
(க.கிஷாந்தன்)