TamileNews
News >> WORLD NEWS
சிரியாவில் மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல்

சிரியாவில் மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல்

சிரியாவில் ஐ.எஸ். அமைப்புக்கெதிராக அமெரிக்கா மற்றும் ரஷ்யா இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 28 சிவிலியன்கள் பலியானதுடன் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.
 
இந்தத் தாக்குதல்கள், ஐ.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காந்தோர் என்ற நகரிலேயே நடத்தப்பட்டுள்ளன.
 
இதன்போது, காந்தோரின் இட்லிப் என்ற பகுதியில் இயங்கிவந்த கர்ப்பிணிகளுக்கான மருத்துவமனை ஒன்று நேரடியாக குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானது.
 
இதையடுத்து, மருத்துவமனையில் உள்ள குழந்தைகளைக் காப்பாற்ற முன்வருமாறு ‘சேவ் த சில்ரன்’ தொண்டு நிறுவனம் ஒன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கோரியுள்ளது.