TamileNews
News >> LOCAL NEWS
2017 ஆம் ஆண்டின் பரீட்சைகள் நேர அட்டவணை வெளியீடு

2017 ஆம் ஆண்டின் பரீட்சைகள் நேர அட்டவணை வெளியீடு

இவ்வாண்டு நடைபெறவுள்ள கா.பொ.த சாதாரண தரம், உயர்தரம் மற்றும் தரம் 05 புலமை பரிசில் பரீட்சைகளின் நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
 
அதன்படி கா.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
 
தரம் 05 புலமை பரிசில் பரீட்சைகள் ஆகஸ்ட் 20 ஆம் திகதியும், கா.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.