TamileNews
News >> WORLD NEWS
கந்தஹார் தாக்குதலில் 5 தூதரக அதிகாரிகள் உயிரிழப்பு

கந்தஹார் தாக்குதலில் 5 தூதரக அதிகாரிகள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் இடம்பெற்ற தாக்குதலில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஐந்து தூதரக அதிகாரிகள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த தாக்குதலில், அரபு இராச்சியத்தின் தூதுவர் உட்பட 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை,மேற்படி தாக்குதலில் படுகாயமடைந்த கந்தஹார் நகரின் துணை ஆளுநர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
 
ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதிநிதிகள் குழு, மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
இதனையடுத்து,அனைத்து அரச நிறுவனங்களிலும் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு தேசிய கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
 
ஆப்கானிஸ்தானில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆதரவுடன் பல்வேறு திட்டங்களை ஆரம்பிக்கும் நோக்கிலேயே மேற்படி விஜயம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.