TamileNews
News >> WORLD NEWS
தேசியக் கொடியை அவமதித்த வெளிநாட்டவர்கள் கைது!

தேசியக் கொடியை அவமதித்த வெளிநாட்டவர்கள் கைது!

தாய்லாந்தில் தேசியக் கொடியை அவமதித்த குற்றச்சாட்டில் இத்தாலியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
அங்கு மத்திய கிராபி வட்டாரத்தின் கடைகளில் பறக்கவிடப்பட்டிருந்த தேசியக் கொடிகள் சிலவற்றை இத்தாலியர்கள் இருவரும் சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இதனையடுத்து, அப்பகுதியிலுள்ள சுற்றுப்புறக் கண்காணிப்புக் கெமராவில் மேற்படி காட்சி பதிவாகியிருந்தது. 
 
இதேவேளை, தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்த இத்தாலியர் இருவரும், சம்பவம் நடந்தபோது போதையில் ஆழ்ந்திருந்ததாகவும்  என்ன நடந்தது என்பதை நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை எனவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
 
தேசியக் கொடியை அவமதித்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது சுமார் 100 ‍டொலர் அபராதம் விதிக்கப்படும் என நம்பப்படுகிறது.