TamileNews
News >> INDIA NEWS
படப்பிடிப்பு தளத்தில் துணை நடிகை சடலமாக மீட்பு

படப்பிடிப்பு தளத்தில் துணை நடிகை சடலமாக மீட்பு

கன்னட துணை நடிகையொருவர் படப்பிடிப்புத் தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
பிரபல கன்னட நடிகர் வி. ரவிச்சந்திரனின் மகன் மனோரஞ்சன் நடித்து வரும் திரைப்படம் 'விஐபி'. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இந்த படத்தை நந்தகிஷோர் இயக்கி வருகிறார்.
 
படத்தின் பாடல் காட்சி பெங்களூர் ஏலஹன்கா அருகே உள்ள அவலஹள்ளியில் நேற்றுமுன்தினம் படமாக்கப்பட்டது. அன்றைய படப்பிடிப்பில் 160 பேர் கலந்து கொண்டனர்.
 
படப்பிடிப்பு முடிந்து மாலை அனைவரும் வீட்டிற்கு புறப்படும் போது துணை நடிகை பத்மாவதி (வயது 44) மாயமானது தெரியவந்தது. உடனே படக்குழுவினர் அவரை தேடினர்.
 
இதனைத்தொடர்ந்து, படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு அருகே கட்டுமானத்தில் இருந்த கட்டடத்தின் லிப்ட் உள்ள பகுதியில் நடிகை சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
ஜக்கூரை சேர்ந்த பத்மாவதி, கடந்த 20 ஆண்டுகளாக படங்களில் நடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.