TamileNews
News >> LOCAL NEWS
முகமூடி கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகரிப்பு

முகமூடி கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகரிப்பு

ஆயுதம் தரித்த முகமூடி கொள்ளையர்கள் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளதாகவும்  மக்கள் மிக அவதானத்துடன் இருக்குமாறும் பொலிஸ் தலைமையகம் பொது மக்களை அறிவுருத்தியுள்ளது.
 
களனி பொலிஸ் பிராந்தியத்துக்கு உட்பட்ட வத்தளை, ஜா எல, வெலிசறை, கிரிபத்கொடை உள்ளிட்ட பகுதிகளில் இந்த கொள்ளை கோஷ்டியானது பாரிய கொள்ளைகள் பலவற்றுடன் தொடர்புபட்டுள்ளமை உறுதி செய்யப்ப்ட்டுள்ள நிலையில் சிறப்பு பொலிஸ் குழுவொன்று இவ்விவகாரம் தொடர்பில் களமிறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.
 
(எம்.எப்.எம்.பஸீர்)