TamileNews
News >> WORLD NEWS
 நாளை பிரியாவிடை பெறும் ஜனாதிபதி ஒபாமாவின்  குரல்!

நாளை பிரியாவிடை பெறும் ஜனாதிபதி ஒபாமாவின் குரல்!

அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவடைவதை முன்னிட்டு, நாளை அவர் நாட்டு மக்களுக்கு பிரியாவிடை உரை வழங்கவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக ஆற்றவுள்ள இறுதி உரையாக இது ஒபாமாவுக்கு அமையவுள்ளமையால் அதற்கான ஏற்பாடுகள் சிகாகோ நகரில் சிறப்பாக  நடைபெற்றுவருகின்றன.

கடந்த 8 ஆண்டு கால வெள்ளை மாளிகை வாசத்துக்குப் பிறகு இன்னும் 10 நாளில் ஒபாமா அங்கிருந்து விடைபெறவிருக்கிறார்.
 
ஒபாமா தமது உரையில், தான் பதவிக்காலத்தில் ஆற்றிய சேவையில் நாட்டுக்கும், உலகுக்கும் நல்ல மாற்றங்கள் ஏற்படுத்தியதாகவும்,  நாட்டு மக்களுக்கு  நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.