TamileNews
News >> LOCAL NEWS
வெள்ளவத்தை மசாஜ் சென்டர் சுற்றிவளைப்பு

வெள்ளவத்தை மசாஜ் சென்டர் சுற்றிவளைப்பு

வெள்ளவத்தையில் மசாஜ் சென்டர் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதியை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது அங்கிருந்த நான்கு பெண்களுடன் அதன் முகாமையாளரும் கைது செய்யப்பட்டார்.

கைதான பெண்கள், கிராண்பாஸ் மற்றும் கண்டி, மாத்தளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்கள் 33, 27, 24 வயதானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஐவரையும் புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கையெடுத்துள்ளனர்.