TamileNews
Sports >> CRICKET
 பார்த்தீவ் அரை சதம்!

பார்த்தீவ் அரை சதம்!

மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை பைனலில் குஜராத் கேப்டன் பார்த்திவ் படேல் அரை சதம் கடந்தார். ம.பி.,யில் உள்ள இந்துாரில் ரஞ்சி கோப்பை பைனல் நடக்கிறது. இதில் மும்பை, குஜராத் அணிகள் மோதுகின்றன. முதல் இன்னிங்சில் மும்பை அணி 228 ஓட்டங்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், குஜராத் அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 2 ஓட்டங்கள் எடுத்திருந்தது. சமித் கோயல் (2), பிரியங்க் பன்சால் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 
இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடக்கிறது. சமித் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பிரியங்க் (6) ஏமாற்றினார். பின் இணைந்த கேப்டன் பார்த்திவ் படேல், பார்கவ் ஜோடி சிறப்பாக செயல்பட்டது. பார்கவ் 45 ஓட்டங்கள் எடுத்தார். பார்த்தீவ் அரை சதம் கடந்தார். உணவு இடைவேளைக்குப்பின், குஜராத் அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 179 ஓட்டங்கள் எடுத்து 49 ஓட்டங்கள் பின்தங்கி இருந்தது. பார்த்திவ் (74), மன்பிரீத் ஜுனேஜா (40) அஓட்டங்கள் இருந்தனர்.