TamileNews
Sports >> OTHER SPORTS
வெற்றியைக் கோட்டைவிட்ட சிந்து

வெற்றியைக் கோட்டைவிட்ட சிந்து

ஹொங்கொங்கில் நடைபெற்ற ஹொங்கொங் ஓபன் இறகுப் பந்துப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வியைத் தழுவினார். ஆண்கள் பிரிவில் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற சமீர் வர்மாவும் ஏமாற்றினார்.
 
ரியோ ஒலிம்பிக்கில் சிந்துவிடம் தோல்வியடைந்த சீன தாய்ப்பே வீராங்கனை டாய் ட்சு யிங், இந்த இறுதிப் போட்டியைச் சரியாகப் பயன்படுத்தி சிந்துவை வீழ்த்தினார்.
 
சுமார் நாற்பது நிமிட நேரம் நீண்ட இந்தப் போட்டியில் சிந்து, 15-21, 17-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார். முதல் செட்டில் மிக எளிதாக வெற்றியடைந்த யிங், இரண்டாவது செட்டில் சிந்துவின் தாக்குதல்களை எதிர்கொள்ளச் சற்றுத் தடுமாறினார் என்றே சொல்லலாம். 
 
பத்து புள்ளிகள் வரை இடைவிடாது போராடிய சிந்து, அதன்பிறகு யிங்கின் ஆக்ரோஷமான உடனடித் தாக்குதலுக்கு அடிபணிந்து தோல்வியைத் தழுவினார்.