TamileNews
Sports >> CRICKET
 வசீம் மீது பிடியாணை!

வசீம் மீது பிடியாணை!

சாலை  விபத்து வழக்கில் நீதிமன்றத்தில்  ஆஜராகாத வசிம் அக்ரமுக்கு பிணையில் வெளியே வரக்கூடிய பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம்  உத்தரவிட்டது.பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் வாசிம் அக்ரம். சிறந்த இடது கை வேகப்பந்து வீரரான அவர் சகலதுறை ஆட்டக்காரராகவும் ஜொலித்தார். தற்போது டெலிவி‌ஷன் வர்ணணையாளராக இருக்கிறார்.
 
கடந்த ஆகஸ்ட் மாதம் வாசிம் அக்ரம் சென்ற கார் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி அமினுர் ரகுமான் மீது மோதியது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வசிம் அக்ரம் மீது துப்பாக்கியால் சுட்டார். ஆனால் நல்லவேளையாக அவர் மீது படவில்லை. காரில்தான் குண்டு பாய்ந்தன. சில நாட்கள் கழித்து இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டனர். ஆனால் பகதூர்பாத் பொலிஸ் நிலையம் இது குறித்து தானாக முன்வந்து வழக்குபதிவு செய்தது.
 
இந்த வழக்கு விசாரணை கராச்சி கோர்ட்டில் நடந்த போது வாசிம் அக்ரம் 31 முறை கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து வாசிம் அக்ரமுக்கு பிணையில் வெளியே வரக்கூடிய  பிடயைாணை பிறப்பித்து  நீதிமன்றம்    உத்தரவிட்டது. அடுத்த கட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அப்போது அக்ரம் ஆஜராவதை உறுதிப்படுத்துமாறு போலீசுக்கு உத்தரவிட்டது.
 
தற்போது  வசிம் அக்ரம் குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில் உள்ளார். அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடரை பார்ப்பதற்காக அவர் அங்கு சென்று உள்ளார். 1992ஆம் ஆண்டு பாகிஸ்தான் உலக கோப்பையை வெல்ல வாசிம் அக்ரம் முக்கிய பங்கு வசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.