TamileNews
Sports >> CRICKET
கையைப் பிசையும் பொலார்ட்

கையைப் பிசையும் பொலார்ட்

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ராம் ஸ்லாம் இ20 போட்டித் தொடரில் விளையாடுவதற்கு, கீரோன் பொலார்டுக்கு அனுமதி வழங்க மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மறுத்துள்ளது.
 
அயல் நாடுகளில் நடைபெறும் இ20 போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் 20 சதவீதத்தை அறவிட மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை முடிவு செய்ததையடுத்தே பொலார்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
 
தென்னாப்பிரிக்காவின் கேப் கோப்ராஸ் அணி சார்பில் விளையாட இரண்டு வருட ஒப்பந்தத்தில் பொலார்ட் கைச்சாத்திட்டுள்ளார். எதிர்வரும் 11ஆம் திகதி ராம் ஸ்லாம் போட்டித் தொடர் ஆரம்பமாகவிருக்கிறது.
 
இந்த நிலையிலேயே மேற்கிந்திய கிரிக்கெட் சபை இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. இதனையடுத்து, செய்வதறியாமல் கையைப் பிசைந்துகொண்டிருக்கிறார் பொலார்ட்.