TamileNews
Spritual >> ASTROLOGY
“போற்ற வேண்டியவை உண்மை, உழைப்பு, உயர்வு

“போற்ற வேண்டியவை உண்மை, உழைப்பு, உயர்வு"

09.12.2016 துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 24 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.
சுக்கில பட்ச தசமி திதி மாலை 5.50 வரை. பின்னர் ஏகாதசி திதி. ரேவதி நட்சத்திரம் பின்னிரவு 4.51 வரை.  பின்னர் அஸ்வினி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை தசமி அமிர்த யோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் அஸ்தம். 
 
சுபநேரங்கள்; காலை 09.15 – 10.15 
மாலை 5.30 – 6.00 
ராகு காலம் 10.30 – 12.00 
எமகண்டம் 3.00 – 4.30 
குளிகை காலம் 7.30 – 9.00 
வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்) சுபமுகூர்த்த நாள்.செவ்வாய், குரு கிரகங்களின் ஆதிக்க நாள்.
 
மேடம்: சாந்தம்
இடபம்: யோகம் 
மிதுனம்: லஷ்மீகரம் 
கடகம்: அதிர்ஷ்டம் 
சிம்மம்: விரோதம்
கன்னி: கஷ்டம் 
துலாம்: லாபம் 
விருச்சிகம்: உதவி 
தனுசு: பாசம் 
மகரம்: வெற்றி 
கும்பம்: தாமதம் 
மீனம்: பாராட்டு.
அதிர்ஷ்ட எண்கள்:  5,3,9
பொருந்தா எண்கள்: 2,6,8, 
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சிவப்பு
 
இன்று ரேவதி நட்சத்திரம். இரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருப்பவரான பூஷா என்னும் தேவதை இந்நட்சத்திரத்திற்கு தேவதையாவார். மகாபாரத்தில் அபிமன்யு இந்நட்சத்திரத்தில் பிறந்தவர். திருவோணத்தில் அவதரித்த ஸ்ரீரெங்கநாதர் இன்று ரேவதி நட்சத்திரத்தில் வழிபட வேண்டிய அதிர்ஷ்ட தெய்வமாவார்.  
 
“போற்ற வேண்டியவை உண்மை, உழைப்பு, உயர்வு. பின்பற்ற வேண்டியவை கனிவு, பணிவு, துணிவு. பேணப்பட வேண்டியவை கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” – அறிஞர் அண்ணா
(இராமரத்தினம் ஜோதி)