TamileNews
Trendy >> TECHNOLOGY

உலகின் மிக நீண்ட தூரத்துக்கு செல்லும் ரயில்!

சீனாவின் குன்மிங் நகரிலிருந்து அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் வரை 2,760 கி.மீ. மிக நீண்ட தொலைவுக்கு பயணிக்கும் புல்லட் ரயில் சேவை நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
 
இந்த ரயிலுக்கு உலகப் புகழ்பெற்றதும் சீனாவின் யுன்னன் மாகாணத்தில் உள்ள ஷங்ரி-லா என்ற ரிசார்ட்டின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.இது ரயில் பெய்ஜிங் நகரை அடைய 13 மணி நேரம் எடுக்கும்.
 
பிரித்தானிய நாவலாசிரியர் தான் எழுதிய "லாஸ்ட் ஹாரிஸான்' என்ற புத்தகத்தில் ஷங்ரி-லா என்ற  பெயர் முதன்முதல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்த ரயில் செல்லும் பாதை மிக நீண்ட தூரத்துக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளதுடன், சீனாவின் கிழக்கு-மேற்கு ரயில்வேயை இணைக்கும் வகையில் சுமார் 20,000 கி.மீ. தொலைவுக்கு இந்த ரயில் பாதை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்த புல்லட் ரயிலின் இரண்டாம் வகுப்புக் கட்டணம் 1,147 யுவான் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.