TamileNews
Trendy >> TECHNOLOGY
விளையாடிக் கொண்டே உடல்எடையை குறைக்கலாம்..!

விளையாடிக் கொண்டே உடல்எடையை குறைக்கலாம்..!

இன்று அனைவருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை நேரம்.

ஒருநாளில் 24 மணிநேரம் நமக்கு எப்போதும் போதுமாக இருப்பதேயில்லை. வேலை, நாளாந்த கடமை, உடற்பயிற்சி என நமக்கு எப்போது நேரம் பற்றாகுறை தான். இந்நிலையில், ஓய்வு என்பதை நம்மால் நினைத்துக் கூட பார்க்கமுடிவதில்லை. அதனால், மன அழுத்தம் ஏற்பட்டு உடல்நலன் பாதிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் அறிமுகமாகியுள்ளது ஒரு வினோதமான உடற்பயிற்சிக் கருவி. இந்த கருவியின் மூலம் நீங்கள் உடல்பயற்சி செய்கிறீர்கள் என்றே தெரியாது. ஏனெனில், நீங்கள் இந்த கருவில் உடற்பயிற்சிக்கு மாறாக, விளையாடவே போகிறீர்கள்.
 
என்ன குழப்பமாக இருக்கிறதா?
 
இந்தக் கருவியை நீங்கள் வாங்கும் பொழுது ஒரு கேம் அப்ளிகேஷனும் கொடுக்கப்படுகிறது. அதை உங்கள் கையடக்கத் தொலைபேசியில் இன்ஸ்டால் செய்யவேண்டும். அதன்பின்னர், அந்த கையடக்கத் தொலைபேசியை கருவின் நடுவே உள்ள பக்கத்தில் வைத்து விளையாட வேண்டும்.
 
அப்போது, உடலும் அசைந்து உங்களுக்கே தெரியாமல் உடற்பயிற்சியை செய்வீர்கள். மொத்தத்தில் ஒரே நேரத்தில் நீங்கள் வினோதத்துடன் கூடிய ஆரோக்கியத்தை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். இதன்மூலம் உங்கள் உடலும் உள்ளமும் உற்சாகமடைகிறது.