TamileNews
Trendy >> TECHNOLOGY
நோர்வேயில் எஃப்.எம். ரேடியோவுக்கு தடை!

நோர்வேயில் எஃப்.எம். ரேடியோவுக்கு தடை!

நோர்வேயில் பண்பலை வானொலி சேவையை இந்த ஆண்டுமுதல் முழுமையாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நோர்வே அரசு தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் ரேடியோ ஒலிபரப்புக்கு மாறும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக நோர்வே மேலும் இது குறித்து  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த முடிவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் கடந்த டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. 
 
கடந்த 1950களிலிருந்து பயன்பாட்டில் இருந்து அங்கு ஒலிபரப்பில் ஈடுபட்டுவரும் பண்பலை வானொலி சேவையை  2017ஆம் ஆண்டில் முழுமையாக நிறுத்த முடிவு செய்யப்பட்டு முதற்கட்டமாக போடோ நகரில் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் அனைத்து எஃப்.எம் ரேடியோ சேவைகளும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனினும், அரசின் இந்த முடிவுக்கு பெரும்பாலான  மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.