TamileNews
Trendy >> TECHNOLOGY
எவ்வளவு நேரம் வேணும்னாலும் பாட்டு கேளுங்க..!

எவ்வளவு நேரம் வேணும்னாலும் பாட்டு கேளுங்க..!

 ஆசை ஆசையாக போனில் பாட்டுகளை டவுண்லோட் செய்கிறோம். ஆனால், அதை தொடர்ச்சியாக கேட்கத்தான் முடிவதில்லை.

ஹெட்போனை காதில் வைத்துக்கொண்டு மொபைல் போனில் அதை கனெக்ட் செய்து, சில நிமிடங்களிலேயே காது வலி ஆரம்பித்துவிடும். இதனால், பாட்டு கேட்க முடியாத சோகத்தோடு காது வலியும் இணைந்து கொள்கிறது.

ஆனால், இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். 
 
நீண்ட நேரம் பாடல் கேட்க வேண்டும் என்ற உங்கள் ஆசைக்கெனவே வடிவமைக்கப்பட்டுள்ளன, Spirit E666 ஹெட்போன்கள். இவற்றை அணியும்போது மற்றவர்களைவிட வித்தியாசமாகவும் வேற்றுக் கிரக வாசிகளைப் போலவும் காணப்படுவீர்கள்.
 
ஹெட்போன், நீண்ட காது போன்ற வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. அவரவர் தோலின் நிறத்துக்கு ஏற்ப இந்தக் காது ஹெட்போன்கள் கிடைக்கின்றன. அதனால் விகாரமாகத் தெரியாது. 
 
சீன இணையதளம் மூலம் விற்பனைக்கு வந்துள்ள இந்த ஹெட்போன்களுக்கு தற்போது ஓடர்கள் வந்து குவிகிறதாம். ஆனால், இதுவரை சீனாவைத் தவிர வேறு எங்கும் விற்பனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.