TamileNews
Trendy >> TECHNOLOGY
 ‘மோட்டோ 360’ வெளியீடு தாமதம்..!

‘மோட்டோ 360’ வெளியீடு தாமதம்..!

‘மோட்டோ 360’ எனப்டும் ஸ்மார்ட் கைக்கடிகார தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக பிரபல லெனவோ நிறுவனம் அண்மையில் அறிவித்துள்ளது.
 
சீன ஸ்மார்ட் போன்  நிறுவனமான லெனவோ, ‘மோட்டோ 360’  என பெயரிடப்பட்ட ஸ்மார்ட் கைக்கடிகார தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.
 
இதனையடுத்து, இவ் வருடம் 'மோட்டோ 360' அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது குறித்த எந்த தகவலையும் வெளியிடாத லெனவோ நிறுவனம், வாட்ச் தயாரிப்பிற்கான சந்தை வாய்ப்பு மந்தமாக உள்ளமையால் தற்போதைக்கு  புதிய ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்துவது தவறான முடிவாகவே இருக்கும். எனவே தற்காலிகமாக ’மோட்டோ 360’ ஸ்மாட் கைக்கடிகாரம் அறிமுகப்படுத்துவதை ஒத்தி வைத்துள்ளோம்.” என அறிவித்துள்ளது.
 
இதே‍வேளை, அண்மைக்காலமாக ஸ்மார்ட் போன் மற்றும் கைக்கடிகாரங்களின் விற்பனை 50 சதவீத சரிவை எதிர்கொண்டுள்ளன.
 
மேலும், இண்டெல் நிறுவனம் அண்மையில் தனது ஸ்மார்ட் போன் தயாரிப்புப் பிரிவை மூடவுள்ளதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.